சம்பந்தனுக்கு தகுதி இல்லையாம்!!

மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு தகுதி இல்லை என குறிப்பிடப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சரான டிலான் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வா தெரிவித்துள்ளார்.

நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்களிலும் ஊழல், மோசடிகள் இடம்பெற்றுவருகிறது.

ஆனால், அவற்றுடன் தொடர்புடைய எவரும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்ததார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளபோதே இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, மேசடியில் ஈடுபட்ட ஒருவர் கூட குற்றவாளியாகவில்லை என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால், இதுகுறித்து கருத்து வெளியிட சம்பந்தனுக்கு தகுதி இல்லை என்பதையும் கூறிக்கொள்ள வேண்டும். ஊழல், மோசடிகளில் அவர் தனிப்பட்ட ரீதியில் தொடர்பில்லாதவர். இருப்பினும், வங்கிக் கொள்ளைகள், கொலைகள் என்பவற்றுடன் அவரது கட்சியினர் சம்பந்தப்பட்டுள்ளார்.

இதன்போதெல்லாம் அவர் அமைதியாகவே இருந்துவந்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவருக்கு நாட்டில் இடம்பெற்ற ஏனைய மோசடிகள் தொடர்பில் பேசுவதற்குத் தகுதியே இல்லை என்று டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.