சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு கொடுக்காத மரியாதையை பன்னீர் செல்வத்துக்கு திமுகவினர் அளித்துள்ளனர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவர் சட்டசபைக்கு வரும் போது அதிமுக- எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்பர்.
ஆனால், திமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து நிற்பதில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், முதல் சட்டசபை கூட்ட தொடர் நடந்து வருகிறது.
நேற்று, முதல்வர் பன்னீர்செல்வம் வந்த போது, அதிமுகவினர் மட்டுமின்றி, திமுகவினரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுக்கு அளிக்காத மரியாதையை திமுகவினர் பன்னீர் செல்வத்துக்கு அளித்துள்ளனர்.