தமிழக சட்டப்பேரவையில் இன்று மாணவர்கள் போராட்டம் தொடர்பாகவும், கடைசி நேரத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
வன்முறை குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அரசின் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்த ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது, ” போராட்டம் திசைமாறியதால் தான் தடியடி நடத்தும் நிலை ஏற்பட்டது.
அமைதியான போராட்டத்தை சிலர் திசை திருப்பினர். போலீசாரின் காவல்தடுப்புகளை மீறி மெரினா வர முயன்றனர். போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தை சிலர் பயன்படுத்தினர். அதற்கான ஆதாரம் உள்ளது. காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ” இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசியுள்ளார்.