28 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன்: 25 வது பெண் கொடுத்த அதிர்ச்சி தண்டனை!

வங்கதேசத்தில் 28 பெண்களை திருமணம் செய்த கல்யான மன்னனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வங்கதேசத்தின் பர்குணா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு நபரை திருமணம் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து இவர்களுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அக்குழந்தையை நன்றாக வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பெண்ணுக்கு தன் கணவர் பல பெண்களை திருமணம் செய்துள்ளார் என்ற விடயம் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், தன் கணவர் திருமணம் செய்த பெண்களை தேடி கண்பிடிக்க ஆரம்பித்தார்.

இதன் பயனாக 17 பேரின் முகவரிகள் மட்டும் கிடைத்துள்ளன. அதை வைத்துக் கொண்டு அவர்களை தேடியுள்ளார். அப்போது தனது கணவரின் 2 வது மனைவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் என்றும், 3 வது மனைவிக்கு ஒரு மகன் உள்ளான் என்றும், 7 வது மனைவிக்கு ஒரு மகனும், 24 வது மனைவிக்கு ஒரு மகள் உள்ளனர் என்பதை அறிந்துள்ளார்.

இவர்களின் தான் 25 வது பெண் என்பதை அறிந்து கொண்ட அவர், இதனால் ஆத்திரமடைந்த அவர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அதற்கு உறுதியான ஆதாரம் இல்லாமல் தவித்துள்ளனர்.

இதனால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி குல்னா தலைமை ஜூடிசியல் மாஸ்திரேட்டிடம் புகார் அளித்தார்.

அதைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய தீவிர தேடுதலின் போது, அவர் 27 வது மனைவியின் வீட்டில் இருந்து வந்துள்ளார். அதன் பின்னர் பொலிசார அவரை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தியுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தான் இரண்டு திருமணங்கள் மட்டுமே செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.