சனிக்குரிய திருத்தலமானது திருநள்ளாறு. அதேபோல சென்னையில் இருப்பது வடநள்ளாறு என்று அழைக்கப்படுகிறது. இந்த தலம், பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் இருக்கிறது. மூலவர் பெயர் அகஸ்தீஸ்வரர். அம்பிகையின் பெயர் ஆனந்தவல்லி.
சிவபெருமானின் திருக்கோலங்களில் ஒன்றான பைரவமூர்த்தி, இத்தலத்தில் காவல் தெய்வமாக ஆக்ரோஷம் பெற்ற சம்ஹார கால பைரவராக வீற்றிருக்கிறார். சனியின் தொல்லைகளை களைவதில் பைரவமூர்த்திக்கு இருக்கும் முக்கியத்துவத்தை அவரது அருளை பெற்றவர்களே அறிவார்கள். இத்தலத்தில் சனிக்கு தனி சன்னிதியும், நள தீர்த்தமும் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.