பெண்களை விட ஆண்களுக்குத் தான் பெரும்பாலும் அதிகப்படியான தொப்பை ஏற்படுகிறது. அதற்கு என்ன காரணம் என நீங்கள் யோசித்தது உண்டா?
ஆண்களுக்கு பெண்களை விட அதிகமான தொப்பை ஏற்பட என்ன காரணம்?
- பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருபாலர்களுக்கும் அதிகப்படியான தொப்பை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது.
- ஆண்கள் அதிகமாக பீர் குடிப்பார்கள். அதுமட்டுமில்லாமல் ஆண்களின் சில பழக்க வழக்கங்கள் தொப்பை வருவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
- பீரானது ஆரோக்கியமானதாக இருந்தாலும், கூட இதனை அடிக்கடி குடித்தால் தொப்பை அதிகமாக உண்டாகும். ஏனெனில் இதில் கலோரிகள் அதிகமாக நிறைந்துள்ளது.
- ஆண்கள் நாற்காலியில் அதிக நேரம், உட்கார்ந்தவாறே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். இதனால் சாப்பிடும் சாப்பாடு சரியாக ஜீரணம் அடையாமல், அந்த உணவுகள் கொழுப்புக்களாக மாறி உடலில் தங்கி அதிகப்படியான உடல் பருமனை உருவாக்குகிறது.
- ஆண்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், பல ஆண்கள் அதிகப்படியான மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள். இதனால் அவர்களின் உடலில் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுகிறது.
- ஆண்களின் இது போன்ற பழக்க வழக்கங்கள் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் காரணமாக பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக தொப்பை ஏற்படுகிறது.