புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத 300 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் வடக்கில் வாழ்ந்து வருவதாக இராணுவ அதிகாரிகளுக்கு இது பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாதவர்கள் எனவும் இவ்வாறு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத முன்னாள் போராளிகள் ஐரோப்பிய புலி வலையமைப்புடன் தொடர்பு பேணி வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த முன்னாள் போராளிகள் வடக்கில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களுடனும் தொடர்புபட்டிருப்பதாகவும் கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.