பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய பாதுகாப்புச் சட்டமொன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தேசிய பாதுகாப்புப் பிரிவு பிரதானிகளுடன் இடம்பெற்ற நீண்ட பல கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரையின் 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பிலும் 1978 ஆம் அரசியல் யாப்பிலும் பிரித்தானியர்கள் அறிமுகம் செய்த பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் அமைந்த பயங்கரவாதத் தடைச் சட்டமே காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த பயங்கரவாத அடிப்படைச் சட்டத்தை இலங்கையில் அறிமுகம் செய்த பிரித்தானியாவிலும் கூட தற்போது, நவீன காலத்திற்கு ஏற்ப அது மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.