அத்தியாவசிய பொருட்களுக்கான அதிகபட்ச விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகார சபை இதனை அறிவித்துள்ளது.
இதற்கமைய மைசூர் பருப்பு கிலோ ஒன்றின் விலை 159 ரூபாவாகவும், வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை 93 ரூபாவாகவும், பாசிப் பயறு கிலோ ஒன்றின் விலை 205 ரூபாவாகவும் விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், துபாய் நெத்தலி கிலோ ஒன்றின் விலை 405 ரூபாவாகவும், தாய்லாந்து நெத்தலி கிலோ ஒன்றின் விலை 490 ரூபாகவும், விதை கிழங்கு கிலோ ஒன்றின் விலை 115 ரூபாவாகவும் விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த அதிகபட்ச விலைகள் நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.