2020 வரை அதிகார கனவு வேண்டாம்!

2020 இற்கு முன்னர் அரசியல் அதிகாரம் குறித்து எவரும் நினைத்துப் பார்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மொனாராகலை கும்புக்கன் ஓயா நீர்தேக்க திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அதிகாரங்களை கோரி சிலர் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். ஆனால் 2020ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெறும் தேர்தலில் மக்களின் தீர்ப்புக்கு அமையவே அனைத்தும் நடைபெறும்.

அதற்கு முன்னர் அரசியல் அதிகாரங்கள் குறித்து எவரும் நினைத்து பார்க்க முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

குறுகிய அரசியல் நோக்கங்களை மறந்து, அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே நாட்டை நேசிக்கும் அனைத்து அரசியல் வாதிகளினதும் பொறுப்பாகும்.

அதிகாரங்களுக்காக அன்றி நாட்டை கட்டியெழுப்பவே அனைவரும் இன்று ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.