நல்லாட்சி அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்காது: சஜித் பிரேமதாச

நல்லாட்சி அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்காது.பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக்கு குந்தகம் ஏற்படாது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், பௌத்த மதத்திற்கான முன்னுரிமை குறையாது எனவும் கடந்த அரசாங்கமே நாட்டுக்கு பாதகம் ஏற்படக்கூடிய சமஷ்டி ஆட்சி முறையிலான அரசியல் சாசனமொன்றை உருவாக்க முயற்சித்தது எனவும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.