அப்பல்லோவில் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்!

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அதிமுக கடலூர் சட்டமன்ற உறுப்பினரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்து வரும் எம்.சி.சம்பத் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் சம்பத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.