நடிகர் சூர்யா மற்றும் இதர நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இவ்வளவு காலதாமதாக குரல் கொடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது என்றும் நடிகர் சூர்யா தற்போது வெளியாகவிருக்கும் சிங்கம் 3 படத்திற்காகத்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதவாக கருத்து தெரிவித்துள்ளார் என பீட்டா அமைப்பு சமீபத்தில் கருத்து தெரிவித்தது.
பீட்டாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சூர்யா, இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கும்படி பீட்டா அமைப்புக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், சூர்யாவிடம் பீட்டா அமைப்பு மன்னிப்பு கோரியுள்ளது. அதில், நாங்கள் உங்களுக்கு எதிரான அனைத்து கருத்துக்களுக்கும் மன்னிப்பு கோருகிறோம்.
நீங்கள் அகரம் என்ற பெயரில் ஒரு நல்ல அமைப்பு நடத்தி வருவது எங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் தவறுதலாத தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.