மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான் என்ற புரட்சித் தலைவி அம்மா வழியில் நடப்பதுதான் என் வழியாக இருக்கும் என மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா வீட்டுக்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். ஆதரவாளர்கள் முன்பு தீபா பேசுகையில்,
புரட்சித் தலைவர் வழியிலும், புரட்சித் தலைவி அம்மா வழியிலும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இடையில் தேவையற்ற கருத்துக்களையும், வதந்திகளையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதனை யாரும் நம்ப வேண்டாம்.
தமிழ்நாடும், தமிழ் மக்களும் என் இரண்டு கண்களாக செயல்படும் என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இருக்காது. எந்தவொரு காலக்கட்டத்திலேயும் என்னை நம்பி வந்தவர்களை நான் கைவிட மாட்டேன்.
மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான் என்ற புரட்சித் தலைவி அம்மா வழியில் நடப்பதுதான் என் வழியாக இருக்கும். மக்கள் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளேன்.
தொடர்ந்து பணிகளை செய்துகொண்டிருப்பேன். எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து பணிகளை செய்து கொண்டிருப்பேன். அனைவரின் கருத்துக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து உங்களது கருத்துக்களை அளியுங்கள் எனக் கூறியுள்ளார்.