டிரம்பின் முடிவு நியாயப்படுத்த முடியாத ஒன்று – ஜெர்மனி பிரதமர்

அமெரிக்க ஜனாதிபதியாக சமீபத்தில் பதவி ஏற்ற நாள் முதல் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கையாக எந்தவொரு நாட்டில் இருந்தும் அகதிகள் அமெரிக்காவுக்குள் வர 4 மாத கால தடை உத்தரவை நேற்றுமுன்தினம் பிறப்பித்தார்.
உள்நாட்டுப்போரில் சின்னாபின்னமாகி விட்ட சிரியாவில் இருந்து அகதிகள் அமெரிக்காவுக்கு வர காலவரையற்ற தடை விதித்த அதிபர் டிரம்ப்,  ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு
விசா வழங்குவதை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். டொனால்டு டிரம்பின் அதிரடி உத்தரவுகள் அமெரிக்க மக்கள், உலக நாடுகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் டிரம்பின் நடவடிக்கைக்கு ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்கெல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மார்கெலின் செய்தித் தொடர்பாளர் , “ பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், பாதுகாப்பு தேடி வரும் அப்பாவி பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுப்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது” என மார்கெல் கருதுவதாக தெரிவித்துள்ளார்.