சீனா பறக்கிறார் கோத்தபாய!

அரசியல் தொடர்பில் சிறப்பு படிப்பிற்காக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சீன பல்கலைகழகத்திற்கு நுழைய தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூன்று வருட பட்டப்படிப்பிற்காக சீன அரசாங்கத்தினால் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இணைப்பு நடவடிக்கைகளை முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவின் பாத் பைன்டர் என்ற அரச சார்பற்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல் வட்டாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இலங்கையில் அரசியல் முகாமைத்துவம் மேற்கொள்ளும் நிறுவனமான பாத் பைன்டர், சீனாவின் CICIR (China Institutes of contemporary International Relations) நிறுவனத்துடன் உடன்படிக்கைக்கு வந்துள்ளது.

சீனாவின் CICIR நிறுவனம் சீன கொள்கை தயாரிப்பதற்காக மிகவும் அழுத்தம் பிரயோகிக்கும் நிறுவனமாகவும், சீனாவில் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் கண்கானிப்பின் கீழ் செயற்படும் புலனாய்வு பிரிவாகவும் கருதப்படுகின்றது.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமையை ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்கள் சிலர் அவமதிக்கப்படுகின்றமை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஸ வேதனையில் இருப்பதை கருத்திற் கொண்டு மிலிந்த மொரகொட மற்றும் ஊடக பிரிவின் பிரதானியினால் இந்த பட்டப்படிப்பு தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.