ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடாலை எதிர்கொண்டார்.
இதில் முதல் டெ்சடை பெடரர் 6-4 எனக்கைப்பற்றினார். இந்த செட்டை கைப்பற்ற பெரடருக்கு 34 நிமிடங்கள் தேவைபட்டது. முதல் செட்டை இழந்த நடால் 2-வது செட்டில் சிறப்பாக விளையாடினார். இதனால் 2-வது செட்டை 6-3 என நடால் கைப்பற்றினார். இந்த செட்டை கைப்பற்ற நடாலுக்கு 42 நிமிடங்கள் தேவைப்பட்டது. 3-வது செட்டை பெடரர் 6-1 என 40 நிமிடத்தில் கைப்பற்ற, 4-வது செட்டை நடால் 40 நிமிடத்தில் 6-3 எனக் கைப்பற்றினார். இதனால் 4 செட்டுகள் முடிவில் இருவரும் தலா 2 செட்டுகளை கைப்பற்றி 2-2 என சமநிலையில் இருந்தனர்.
வெற்றியை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி செட்டில் முதல் கேமை நடால் கைப்பற்றினார். பெடரர் சர்வ் செய்த அந்த கேம்-ஐ சிறப்பாக முறியடித்தார். தான் சர்வ் செய்த 2-வது கேம்-ஐ நடால் கைப்பற்றினார். இதனால் நடால் 2-0 என முன்னிலைப் பெற்றார்.
3-வது கேம்-ஐ பெடரர் கைப்பற்றினார். இதனால் நடால் 2-1 என முன்னிலையில் இருந்தார். 4-வது கேம்-ஐ நடால் கைப்பற்றினார். இதனால் 3-1 என முன்னிலைப் பெற்றார்.
பெடரர் சர்வ் செய்த 5-வது கேம்-ஐ அவர் எளிதில் கைப்பற்றினார். இதனால் நடால் 3-2 என முன்னிலைப் பெற்றார். நடால் சர்வ் செய்த 6-வது கேம்-ஐ பெடரர் கடும்போராட்டத்திற்குப்பின் முறியடித்தார். இதனால் 3-3 என ஸ்கோர் சமநிலைப் பெற்றது. அதன்பின் பெடரர் ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார்.
7-வது கேம்-ஐ பெடரர் ஆக்ரோஷமாக சர்வ் செய்தார். இதனால் எளிதில் அதை கைப்பற்றினார். இதனால் பெடரர் 4-3 என முன்னிலைப் பெற்றார். நடால் சர்வ் செய்த 8-வது கேம்-ஐ பெடரர் அட்டகாசமாக முறியடித்தார். இதனால் பெடரர் 5-3 என முன்னிலை பெற்றார். தான் சர்வ் செய்த 9-வது கேம்-ஐ கடும்போராட்டத்திற்குப்பின் பெடரர் கைப்பற்றினார். இதனால் கடைசி செட்டை 6-3 எனக்கைப்பற்றி 3-2 என நடாலை வீழ்த்தினார்.
கடைசி செட்டை வெல்ல பெடரருக்கு 61 நமிடங்கள் தேவைப்பட்டது. நடாலை வீழ்த்த ஒட்டுமொத்தமாக சுமார் 3.30 மணி நேரம் தேவைப்பட்டுள்ளது. இது பெடரரின் 5-வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக 18-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனைப்படைத்துள்ளார்.