கருணாநிதி வீட்டில் சிறைவைக்கப்பட்டு இருக்கிறார்… வைகோ பேச்சால் திமுகவில் சலசலப்பு!!

திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் சிறைவைக்கப்பட்டு இருக்கிறார் என்ற மதிமுக பொதுச்செயலர் வைகோ பேச்சால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஓய்வு எடுக்கும் போதெல்லாம் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என செய்திகள் பரவுவது வழக்கம். அதன்பின்னர் கருணாநிதி வழக்கம் போல பணிகளை மேற்கொண்டு இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்.

அறிக்கையே இல்லை
அண்மையில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார் கருணாநிதி. அதன்பின்னர் கருணாநிதியிடம் இருந்து எந்த ஒரு அறிக்கையும் எதுவும் வெளியாகவில்லை.

பொதுக்குழுவுக்கும் ஆப்சென்ட்
இந்த நிலையில் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பொதுக்குழுவுக்கு கூட கருணாநிதி வரவில்லை.

வீட்டுச் சிறையில் கருணாநிதி

சில நாட்களுக்கு முன்னர் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலர் வைகோ, கருணாநிதி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறினார். அத்துடன் கிளாடியேட்டர் திரைப்படத்தில் அரச பதவிக்காக தந்தையை மகன் கொலை செய்ய முயற்சிப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார் வைகோ.

திமுகவில் சலசலப்பு
செயல் தலைவரான நிலையில் ஸ்டாலினின் செயல்பாடுகளில் திமுகவில் அதிருப்தி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வைகோவின் பேச்சு திமுகவில் சலசலப்பை கிளப்பியுள்ளது.