பெடரர் ரூ.697 கோடி சம்பாதித்து சாதனை!

5 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்சிலாம் பட்டம் வென்று ரோஜர் பெடரர் உலகின் சிறந்த டென்னிஸ் வீரர் என்பதை நிரூபித்து காட்டினார்.

இந்த ஆண்டின் முதல் கிராண்ட்சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் கடந்த 15 தினங்களாக மெல்போர்ன் நகரில் நடந்தது. இதன் பெண்கள் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் பெற்று 23-வது கிராண்ட்சிலாமை கைப்பற்றினார்.

இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் தரவரிசையில் 17-வது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) -9-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) மோதினார்கள். 5 செட்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பெடரர் 6-4, 6-3 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 3 மணி 17 நிமிட நேரம் தேவைப்பட்டது.

35 வயதான பெடரர் கைப்பற்றிய 18-வது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும். இதன்மூலம் அவர் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து சகாப்தம் படைத்து வருகிறார். ஆஸ்திரேலிய ஓபனை 5-வது முறையாக வென்றார்.

ஒபன் எராவில் அதிக வயதில் கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு 35 வயது 5 மாதம் 21 நாட்கள் ஆகிறது. இதற்கு முன் 1972-ம் ஆண்டு ரோஸ்வெல் தனது 37-வது வயதில் ஆஸ்திரேலிய ஓபனை வென்று இருந்தார்.

மேலும் பெடரர் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றினார். கடைசியாக 2012-ம் ஆண்டு விம்பிள்டனை வென்று இருந்தார்.

ரபெல் நடாலை கிராண்ட்சிலாம் இறுதிப்போட்டியில் பெடரர் வீழ்த்துவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 6 முறை தோற்று இருந்தார்.

சாம்பியன் பட்டம் வென்ற பெடரருக்கு ரூ.19 கோடியும், 2-வது இடத்தை பிடித்த நடாலுக்கு ரூ.9ž கோடியும் கிடைத்தன.

இதன்மூலம் பெடரர் 100 மில்லியன் அமெரிக்க டாலரை தொட்டு டென்னிஸ் உலகில் அதிகம் சம்பாதித்த வீரர் என்ற சாதனையை பெடரர் பெற்றார். அவர் ரூ.697 கோடி டென்னிஸ் விளையாட்டு மூலம் சம்பாதித்து உள்ளார்.