ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் பிப்ரவரி 23-ந்தேதி புனேவில் தொடங்குகிறது.
இந்த தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி சிறந்த முறையில் தயாராகும். போட்டியின் போது அதை சிறப்பாக வெளிப்படுத்தும். ஆஸ்திரேலியா இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும். ஏற்கனவே, அப்படி நடந்திருக்கிறது. ஆனால், இந்திய அணி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிடக் கூடாது. அந்த அணி வலுவான வீரர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் இந்திய சூழ்நிலையில் விளையாடுவது கடினம்தான். அவர்களும் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்திய வீரர்களின் ஆட்டத்தைப் பார்த்து அவர்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், அதை இந்திய வீரர்கள் பெரிதாக எண்ணிவிடக்கூடாது’’ என்றார்.