களநடுவரின் தவறான முடிவால் இந்திய அணி இரண்டாவது டி20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பெற்றதாக இங்கிலாந்து அணித்தலைவர் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பும்ரா ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் போட்டிக்கு பின்னர் பேசிய இங்கிலாந்து அணித்தலைவர் இயான் மோர்கன் கூறியதாவது, பும்ரா வீசிய கடைசி ஓவரில், பந்து ஜோ ரூட்டின் பேட்டில் பட்டதை கவனிக்காமல், நடுவர் சாம்ஷுதின் அவுட் கொடுத்தது ஆட்டத்தின் முடிவை மாற்றிவிட்டது.
களநடுவரின் இந்த செயல்பாடு குறித்து, போட்டி நடுவரிடம் முறையிட உள்ளதாக கூறிய மோர்கன், கிட்டத்தட்ட 40 பந்துகளை சந்திருந்திருந்த ரூட் களத்தில் இருந்திருந்தால் முடிவு வேறுமாதிரியாக மாறியிருக்கக்கூடும் எனவும் தெரிவித்தார்.