சென்னை கலவரம் தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள வீடியோக்கள் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அந்த போராட்டத்தை அனுமதித்ததே உள் நோக்கமாக இருக்குமோ என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது “கேரள அரசு பம்பை, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணைகளை கட்ட துவங்கியுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போரட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.
அவர்களின் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிக்கிறது. தமி்ழ்நாடு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நஷ்டத்தில் இறந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் போராட்டம் நடத்தி.ய மாணவர்களிடம் வன்முறையை தூண்டிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். கலவரம் தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள வீடியோக்கள் கிராபிக்ஸ் செய்யப்பட்டவை என தெரிகிறது.
அந்த போராட்டத்தை அனுமதித்ததே உள் நோக்கமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. மெரினாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்”. இவ்வாறு திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.