தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்படும்!

தேசிய பாதுகாப்பையும், பிராந்திய பாதுகாப்பையும் பாதுகாப்பதில் அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அம்பேபுஸ்ஸவில் உள்ள இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

‘மூன்று பத்தாண்டுகளாக நீடித்த போரின் போது, படையினரும் காவல்துறையினரும் செய்த தியாகங்களை நாடு ஒருபோதும் மறந்து விடாது.

தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புக்குத் தேவையான அனைத்தையும், நான் செய்வேன்.

எதிர்கால தேசிய பாதுகாப்புக்காக, ஆற்றல், புலனாய்வு, மற்றும் அனுபவம் என்பன புதிய தொழில்நுட்பத்துடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.

எனவே, நாட்டின் பாதுகாப்புப் படைகளைப் பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்தையும் அரசாங்கம் வழங்கும் என்று உறுதியளிக்கிறேன்.

தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து வளங்களும், அரசாங்கத்தினால் வழங்கப்படும்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.