எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் மீண்டும் அரசியலுக்கு வருவதென்றால் அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் மாத்திரம் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கரணா) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தில் அல்லது அவருடன் அரசியல் மேற்கொள்வதற்கு தான் ஒரு போதும் உடன்பாடு இல்லை. ரணில் ஆட்சியில் நாட்டில் இடம்பெறும் பாரிய மோசடியான முறி மோசடி வரலாற்றில் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேடமாக தற்போது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது. இன்னொரு ஒரு பக்கத்தில் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரி, அபராதம் மற்றும் மானியங்கள் இல்லாமல் செய்தமையினால் மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவின் காலத்தில் இல்லாத வகையில் இலங்கை பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் இல்லாதளவு பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை அரசியலுக்கு வருமாறு அரசாங்கத்தின் சிலர் தனக்கு அழைப்பு விடுத்துள்ளனர். யார் என்ன பிரச்சாரம் கொண்டு சென்றாலும் இன்றும் தனது அரசியல் தலைவர் மஹிந்த ராஜபக்ச எனவும், அவருடன் மேற்கொள்ளப்பட்ட அரசியலின் கீழ் இந்த நாடு இந்தளவிற்கு வங்குகோரத்தடைவதற்கு இடமிருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு உதவி செய்த நபர் என்ற வகையில் மீண்டும் நாடு அவ்வாறான ஒரு இடத்திற்கு செல்ல இடமளிக்க கூடாதென்பதனால், விசேடமாக தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாட்டு தலைவர்கள் அவதானத்தை செலுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.