நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பொலிஸார் சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த 27ம் திகதி நுகேகொடையில் கூட்டு எதிர்க்கட்சியின் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தின் பொழுது பொலிஸார் மிகவும் சுயாதீனமான முறையில் செயற்பட்டனர் என மஹிந்த புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளை விடவும் குறித்த கூட்டத்தின் போது பொலிஸார் சுயாதீனமான முறையில் செயற்பட்டதாகவும் அரசியல் அழுத்தங்களுக்கு அடி பணியவில்லை எனவும் அவர் பாராட்டியுள்ளார்.
பெருமளவலான மக்கள் பங்கேற்ற கூட்டத்தின் போது பொலிஸார் உரிய முறையில் தமது கடமைகளை ஆற்றியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.