பிரதியமைச்சரின் செயலால் ஜனாதிபதி கவலை…!

திவுலப்பிட்டிய பிரதேச செயலாளரை பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பேசியமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

அரச நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கவலை வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க மன்னிப்பு கோர வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த கட்ட கலந்துரையாடலை அரச நிர்வாக சேவைகள் அமைச்சருடன் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி தம்மிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.