கோவா மாநில சட்டசபையின் 40 தொகுதிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க. ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள கடும் முயற்சி எடுத்து வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் கோவாவில் இன்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி, கோவாவில் ஒரு சர்வாதிகாரியை ஆட்சியில் அமர்த்த மாட்டோம் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “இன்று நம்முடைய நாடு ஒரு சர்வாதிகாரியால் ஆட்சி செய்யப்படுகிறது. கோவாவில் தற்போது ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி நடைபெற்று வருகிறது. மோடி என்ன விரும்புகிறாறோ, அது கோவாவில் நடைபெறுகிறது.
கோவாவில் இருந்து ஊழல்களை பிடுங்குவோம். கூட்டத்தில் 60 சதவீதம் புதியவர்களும், இளைஞர்களும் இருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.