டேய் பொட்ட பையா..? கட்சி நிர்வாகிக்கு பளார் விட்ட அதிமுக பெண் எம்.எல்.ஏ

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மனோரஞ்சிதம் கட்சியின் மாவட்ட பிரதநிதியான சக்திவேலை அசிங்கமாக பேசி அறைந்துள்ளார்.

கடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

கட்சியின் மாவட்ட பிரதிநிதியான சக்திவேலை இரண்டு பேர் சேர்ந்து பிடித்து கொள்ள “டேய் பொட்ட பையா? என்கிட்டையேவா” என்று அசிங்கமாக பேசி சட்டையை கிழித்து கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

இந்நிலையில் எம்எல்ஏ அடித்ததற்காக நன்றி தெரிவித்து பரபரப்பாக தொகுதி முழுவதும் போஸ்ட்டர் அடித்து ஒட்டி உள்ளனர்.

இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற மனோரஞ்சிதமை எதிர்த்து பேசியதால் அவருக்கு இந்த நிலைமையாம்.

இது குறித்து சின்னம்மாவிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுவே அம்மாவாக இருந்து இருந்தால் இதெல்லாம் நடக்குமா? என்று புலம்பிய கட்சி தொண்டர்கள், எம்எல்ஏ மனோரஞ்சிதத்திற்கு நன்றி தெரிவித்து போஸ்டரும் ஒட்டிவிட்டனர்.