திமுக தலைவர் கருணாநிதி தீவிர ஓய்வில் இருப்பதால் அவரால் முன்பு போன்று சுறுசுறுப்பாக இயக்கமுடியாமல் இருப்பது வருத்தத்தை அளிப்பதாக திமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து திமுக நிர்வாகிய ஒருவர் கூறியதாவது, அவரது உடலில் இருந்த கொப்புளங்கள் ஆறிவிட்டன. பழைய நினைவுகளை இழந்துவிட்டார்.
அவரைக் குளிப்பாட்டுவது முதல் உணவு சாப்பிட வைப்பது வரையில் உதவியாளர் துணையுடன்தான் செயல்படுத்தப்படுகிறது. எளிதில் செரிக்கக் கூடிய உணவுகள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
தலைவரைச் சந்திக்க கோபாலபுரம் வரும் ஸ்டாலின். அவரிடம், ‘அப்பா…அறிவாலயம் வர்றீங்களாப்பா…? அங்கு வந்து போனால், உங்க உடம்பு நல்ல நிலைக்கு வந்துரும்’ என கலங்கிய கண்களோடு அழைக்கிறார். ‘வேண்டாம்’ என சைகையால் காட்டுகிறார் கருணாநிதி.
சில நேரங்களில் எந்தப் பதிலும் சொல்வதில்லை. மீண்டும் பழையபடி அறிவாலயத்துக்கு வந்து சிறப்பாகச் செயல்படுவார் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
அரசியல் நிகழ்வுகளை தினமும் தனது தந்தையோடு பகிர்ந்துகொள்ளும் ஸ்டாலின், இதனை கேட்பதன் தனது தந்தைக்கு மீண்டும் பழைய நினைவுகள் வராதா என எதிர்பார்த்து காத்திருக்கிறார் என கூறியுள்ளார்.