குஷி மூடுக்கு திரும்பிய அழகிரி!

ஆண்டுதோறும் விமரிசையாக தனது பிறந்தநாளை கொண்டாடும் அழகிரி கடந்த திங்களன்று அப்படி கொண்டாடவில்லை. தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது தான் பிறந்தநாள் கொண்டாட விரும்பவில்லை என்று தவிர்த்து விட்டார்.

கோபாலபுரத்தில் சுயநினைவில்லாமல் இருந்த கருணாநிதி சிறிது சிறிதாக உடல்நலம் தேறிவருகிறார். ஸ்பீச் தெரபி மூலம் நினைவு மற்றும் பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அவர் விரைவில் பழையபடி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்று கட்சியினரே நம்பிக்கை தெரிவிக்கிறார். இது அழகிரிக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

‘தலைவர் பழையபடி ஃபார்முக்கு வந்துட்டா செயல் தலைவர் பதவியே தேவையில்லையே?’ என்று தனது ஆதரவாளர்களிடம் பேசி வருகிறாராம். கருணாநிதி இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு முழுவீச்சில் அரசியலில் இறங்கவும் முடிவு செய்துள்ளாராம் அழகிரி!