அகதிகளை வேலைக்கு அமர்த்துவதா?ஸ்டார்பக்ஸை புறக்கணிக்கும் டிரம்ப் ஆதரவாளர்கள்

அமெரிக்க அதிபராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் டொனால்டு டிரம்ப் , அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ட்ரம்பின் இந்த நடவடிக்கையை கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பல நிறுவனங்கள் விமர்சித்துள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 75  நாடுகளில் செயல்படும் தனது நிறுவனத்தில் 10,000 அகதிகளுக்கு வேலை வழங்க உள்ளதாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின்  தலைவர் ஹோவர்ட் ஷூல்ட்ஸ் அறிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் ஸ்டார்பக்ஸ்-ஐ புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர். அதேபோல ஸ்டார்பக்ஸின் நடவடிக்கையை வரவேற்றுள்ள பொதுமக்களில் பலர் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.