ஓரின சேர்க்கையாளர்கள் மீதான தடை நீக்கம்! சுவிஸ் அதிரடி!!

சுவிட்சர்லாந்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருக்கும் ஓரின சேர்க்கையாளர்கள் மீதான தடை அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் கடந்த 1977ம் ஆண்டு முதல் ஓரின சேர்க்கையாளர்கள் இரத்ததானம் அளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, எய்ட்ஸ் பரவுவதை தடுக்க ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிராக 1980களில் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், கடந்த யூன் மாதம் இந்த தடையை நீக்க கோரி இரத்ததானம் சேவை Swiss Transfusion SRC குழு, Swissmedicயிடம் கோரிக்கை விடுத்தது.

புதிய கண்டறியும் கருவிகள் மூலம் இரத்தத்தில் எய்ட்ஸ் உள்ளதை கண்டறிய முடியும். அதற்காக, தடை விதித்திருப்பது தேவையற்றது என மருத்துவ குழுக்களும் வாதிட்டனர்.

இந்நிலையில், கோரிக்கையை ஏற்ற Swissmedic தடையை நீக்கி ஓரின சேர்க்கையாளர்கள் இரத்ததானம் அளிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் 12 மாதங்கள் பிரம்மச்சாரியாக இருக்கும் ஓரின சேர்க்கையாளர்கள் இரத்தானம் அளிக்க அனுமதி வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. இந்த தடை நீக்கத்தை Swiss Transfusion SRC வரவேற்றுள்ளது.