மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியின் போது இருந்த வெளிவிவகார கொள்கையிலும், தற்போதைய நல்லாட்சியின் வெளிவிவகார கொள்கையே சிறந்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் துசார ஹிந்துநில் குற்றம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் இந்த நாட்டிற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகளாக உகண்டாவின் தலைவர் இலங்கைக்கு வந்தார், சுவாசிலாந்தின் ஜனாதிபதி Mswati III இலங்கைக்கு வந்தார்.
இவர்களில் சுவாசிலாந்தின் ஜனாதிபதிக்கு 45 மனைவிமார் உள்ளனராம். அவரே மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர். மேலும் அவர் இலங்கைக்கு வரும் போது தனது 15 மனைவிகளுடனே வருகைத்தந்தார் எனவும் குறிப்பிட்டார்.
சுவாசிலாந்து நாட்டில் 37 வீதமானவர்களுக்கு எய்ட்ஸ் நோய் காணப்படுகின்றது. இதுவே முன்னைய அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கை என சுட்டிக்காட்டினார்.
ஆனால் தற்போதைய வெளிநாட்டு கொள்கைகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. நாடு சரியான வழியில் பயணிக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.