பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தி பணம் பறித்த இராணுவ அதிகாரி!

இரண்டு பிள்ளைகளின் தாயான பெண்ணை பலவந்தமாக வல்லுறவுக்கு உட்படுத்தி அவரை அச்சுறுத்தி மாதந்தோறும் பணம் பறித்து வந்த இராணுவ அதிகாரி ஒருவரை கைது செய்வதற்காக விசாரணை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த இராணுவ அதிகாரி முல்லைத்தீவு இராணுவ முகாமில் ஒழுக்காற்று அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் குறித்த பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தி அதனை வீடியோவில் பதிவு செய்து அச்சுறுத்தி இவ்வாறு பணம் பறித்து வந்துள்ளார்.

சட்டவிரோத மதுபானங்களை தேடும் பெயரில் மேலும் சிலருடன் வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயான அ பெண்ணை பலந்தமாக அறை ஒன்றுக்குள் இழுத்துச் சென்நு பணம் கேட்டு அச்சுறுத்தி வல்லுறவுக்கு உட்படுத்தியதாக இராணுவ அதிகாரிக்கு எதிராக வரக்காபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இராணுவ அதிகாரி பெண்ணை அச்சுறுத்தி வங்கிக் கணக்கொன்றில் பணத்தை வைப்பு செய்துக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வீட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்ததன் காரணமாக கடந்த 15 ஆம் திகதி சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர், இராணுவ அதிகாரியை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான இராணுவ அதிகாரி கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வரக்காபொல பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.