பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சீன பல்கலைக்கழகத்தில் அரசியல் தொடர்பில் பட்டப்படிப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் தகுதியான நபராக இருக்கும் நோக்கில் கோத்தபாய இந்த முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் ராஜதந்திரி பேராசிரியர் தயான் தயதிலக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவரிடம் வினவிய போது,
கோத்தபாய ராஜபக்ச இந்த முறையிலேயே அரசியலில் ஈடுபட்டால் கற்கை நெறிகளுக்கு செல்லாமல் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஈடுபட முடியும். அத்துடன் தேர்தலில் அவரால் வெற்றிபெற முடியும் என அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு நடந்தால் அது இலங்கையின் எதிர்காலத்திற்கு சிறப்பானதாக காணப்படும் எனவும், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்றால் தனது முழுமையான ஆதரவு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு வெளியிடுவதாக கூறப்படுகின்றது.
மஹிந்த, கோத்தபாயவின் அமைப்பின் பிரதானிக்கு அழைப்பேற்படுத்தி கோத்தபாய ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ளும் முயற்சியை உடனடியாக நிறுத்துமாறு எச்சரித்துள்ளார்.
இவ்வாறு கோத்தபாயவை அரசியலுக்கு கொண்டுவர முயற்சிப்பதனால் அவரை சிறைப்படுத்த கூடும் என மஹிந்த குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியாகியுள்ளது.