பாலியல் தொழிலை நிறுத்த அமைச்சர் ராஜிதவின் புதிய தீர்மானம்!

ஆயுர்வேத சிகிச்சை மற்றும் உடல் பிடிப்பு நிலையங்கள் என்ற பெயரில் இயங்கும் பாலியல் தொழிலை தடுத்து நிறுத்தும் வகையில் உரிய அனுமதிப்பத்திரங்களை வழங்க சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தீர்மானித்துள்ளார்.

உடல் பிடிப்பு நிலையங்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நிலையங்கள் இயங்குவதாக கிடைத்த முறைப்பாடுகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது புதிய நடைமுறையை கையாள்வதன் மூலம் ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் பாலியல் தொழிலை நிறுத்த முடியும் எனவும் பாலியல் தொழில் நிலையங்களை முற்றுகையிடுவது பொலிஸாரின் கடமை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.