முருகனின் 12 கரங்களின் பணிகள்!

முதல் கை – தேவர், முனிவர்களைப் பாதுகாக்கிறது

இரண்டாம் கை – முதல் கை செய்யும் பணிக்கு ஒத்தாசை செய்கிறது

மூன்றாம் கை – உலகத்தை தன் கைக்குள் அடக்குகிறது

நான்காம் கை – தேவையற்ற ஆசைகளைக் களைகிறது

ஐந்தாம் கை – நிறைந்த அருளைத் தருகிறது

ஆறாம் கை – வேல் கொண்டு பக்தர்களைப் பாதுகாக்கிறது

ஏழாம் கை – சரவணபவ என்னும் சொல்லுக்குரிய பொருளை முனிவர்கள் போன்ற தவப்புதல்வர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தும் வகையில் மார்பில் உள்ளது

எட்டாம் கை – மார்பில் இருந்து தொங்கும் மாலையைத் தாங்குகிறது

ஒன்பதாம் கை – யாகபலனை ஏற்கிறது

பத்தாம் கை – இதுவும் யாகபலனை ஏற்கிறது

11ம் கை – மழை தருகிறது

12ம் கை – வள்ளி, தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது