ஜி.வி.பிரகாஷ் கைவசம் தற்போது ‘புருஸ்லீ’, ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘ஷார்ப்’, சர்வமும் தாள மையம்’, ‘ஐங்கரன்‘ உள்ளிட்ட படங்கள் உள்ளன. இதில், ‘புருஸ்லீ’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தற்போது, ‘அடங்காதே’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ‘ஐங்கரன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியானை நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், தற்போது, மகிமா நம்பியாரை இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மகிமா நம்பியார் ‘சாட்டை’, ‘என்னமோ நடக்குது’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அருண் விஜய்யுடன் இவர் நடித்த ‘குற்றம் 23’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ‘ஐங்கரன்’ படத்தை ரவி அரசு இயக்குகிறார். இவர் ஏற்கெனவே அதர்வாவை வைத்து ‘ஈட்டி’ என்ற படத்தை இயக்கியவர். காமன் மேன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.