எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘பாகுபலி’. சரித்திர பின்னணியில் பிரம்மாண்டமாக வெளிவந்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளிவந்த முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை அதிக பட்ஜெட்டிலும், இன்னும் விறுவிறுப்பு கூட்டும் அளவுக்கும் படமாக்கி வருகிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி.
இந்நிலையில், இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.500 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பாகுபலி-2’ படம் எங்கு, என்ன விலைக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்பது குறித்த விவரங்களை கீழே விரிவாக பார்ப்போம்.
மேற்கு கோதாவரி – ரூ.8.5 கோடி
கிழக்கு கோதாவரி – ரூ.9.5 கோடி
நெல்லூர் – ரூ.5.6 கோடி
குண்டூர் – ரூ.11.6 கோடி
உத்தராந்திரா (விசாகப்பட்டினம் ) – ரூ.13.27 கோடி
கிருஷ்ணா – ரூ.9 கோடி
ராயலசீமா – ரூ.27 கோடி
நிஷாம் ஏரியா – ரூ.50 கோடி
தமிழ்நாடு விநியோக உரிமை – 27 கோடி
கர்நாடகா – ரூ.45 கோடி
கேரளா – ரூ. 10.5 கோடி
இந்தி – ரூ.120 கோடி
வட அமெரிக்கா (மட்டும்) – ரூ.45 கோடி
வெளிநாடு – இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.
சாட்டிலைட் உரிமம் வாயிலாக இப்படத்தின் வருமானம் கீழ் வருமாறு
இந்தி – ரூ.51 கோடி + வரி
தெலுங்கு – ரூ.26 கோடி
தமிழ் – இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.
மலையாளம் – இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.
ஆடியோ உரிமம் – இன்னும் விலை நிர்ணயிக்கப்படவில்லை.
இதுவரையில் பார்க்கும்போது ‘பாகுபலி-2’ ரூ.478 கோடியே 97 லட்சத்திற்கு வியாபாரம் ஆகியுள்ளது. இன்னும் சில ஏரியாக்களின் உரிமமும், சாட்டிலைட் உரிமமும் கணக்கில் எடுக்கப்படாமல் உள்ளது. அவையெல்லாம், வியாபாரம் ஆன பின்னால், இப்படம் ரீலீசுக்கு முன்பே ரூ.500 கோடியை தாண்டி வருமானத்தை பெறும் என்பது மட்டும் உண்மை.