ராஜதுரை இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நெப்போலியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘முத்துராமலிங்கம்’. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் பிரியா ஆனந்த், வம்சி கிருஷ்ணா, விவேக், சுமன், பெப்சி விஜயன், சிங்கம் புலி, சிங்கமுத்து என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தில் முத்துராமலிங்க தேவரைப் பற்றிய ஒரு பாடல் உள்ளது. அந்த பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் பாடிக் கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிப்ரவரி 24-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதே நாளில் ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள `எமன்’ படமும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.