எச்சரிக்கை : அதிகப்படியாக நாக்கில் எச்சில் சுரந்தால் இந்த நோயா?

உணவை ஜீரணப்படுத்தும் அமிலங்கள் சில சமயம் அதிகப்படியாக சுரந்தால் நெஞ்செரிச்சல் உண்டாகும். ஆனால் சிலருக்கு அந்த அமிலம் எதுகலிக்கும்.

அதனை ஆசிட் ரிஃப்ளக்ஸ்(Acid Reflux) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். வயிற்றில் உண்டாகும் அழுத்தத்தால் அதிகபடியான அமிலம் மேலே தள்ளப்படுகிறது.

எனவே அமிலம் வாய் வரைக்கும் வருகின்றன. அவைதான் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் ஆகியவற்றை தருவிக்கின்றன. உங்களுக்கு இத்தகைய பாதிப்பு இருக்கிறதா என எப்படி கண்டுபிடிக்கலாம்? இங்குள்ள அறிகுறிகள் உங்களிடம் தென்படுகிறதா என கவனியுங்கள்.

அதிகப்படியான எச்சில் :

உணவை சாப்பிட்டபின் அதிகப்படியான எச்சில் உங்களுக்கு சுரந்தால் அமில எதுகலிப்பின் அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு தலைவலி மற்றும் வாந்தி வருவதற்கு முன் மிக அதிகமாக எச்சில் சுரக்கும்.

நிமோனியா:

வயிற்றிலிருந்து மேலே தள்ளும் அமிலம் வாய் வழியாக மட்டும் வருவதில்லை. நுரையீரலையும் சில சமயங்களில் சென்ற்டையும்.

இதன் விளைவு நிமோனியா உருவாகும். ஆகவே உங்களுக்கு நிமோனியா காய்ச்சலின் அறிகுறிகள் இருந்தால் அதற்கு அமில எதுகலிப்பும் காரணமாக இருக்கலாம்.

நெஞ்சு வலி :

நெஞ்சு வலி இதய பிரச்சனைகளால் மட்டும் வருவதில்லை. அமில சுரப்பு அதிகமாகும் போது வாயு உருவாவதும் அதிகமாகிறது.

இது ரத்த தமனிகளில் அடைபடும்போது நெஞ்சு வலி போல் தோன்றுகிறது. எனவே நெஞ்சு வலி அமில எதுகலிப்பினாலும் வரலாம்.

கசப்பான சுவை :

உங்களுக்கு நாக்கில் கசப்பான சுவை எப்போதும் தெரிந்து கொண்டிருந்தால் அதற்கு அமில எதுகலிப்பும் காரணமாக இருக்கலாம்.

அதிக மூச்சிரைப்பு மற்றும் ஆஸ்துமா:

இரவில் படுக்கும்போது ஆஸ்துமா அல்லது மூச்சைரைப்பு அதிகம் இருந்தால் அதற்கு அமில எதுகலிப்பும் ஒரு காரணம்.

ஏனென்றால் இரவில் படுக்கும்போதுதான் அதிக அமிலம் உணவுக் குழாயின் வழியாக பரவுகின்றன. இதன் காரணமாக சுவாசக் குழாயையும் பாதித்து சுவாச பாதிப்பை தருகின்றன.

விழுங்க கடினம் :

அதிக அமிலம் தொண்டை வரைக்கும் அடிகக்டி பரவி உணவுக் குழாயை சுருங்கச் செய்து விடும். இதனால் உணவு வொழுங்க கடினமாக உணர்வீர்கள்.

அவ்வாறெனில் அமில எதுகலிப்புதான் காரணமாக இருக்கலாம். உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.