ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஆகியுள்ள சசிகலா முயற்சி செய்து வந்த போதிலும், பொது மக்களிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
அதிமுகவின் பொதுச்செயலாளராகிவிட்ட நிலையில், முதல்வராக தயாராகி வந்த சசிகலாவிற்கு ஜல்லிக்கட்டு விடயம் முட்டுகட்டை போட்டது.
தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சனையும் சுமூகமாக முடிந்துள்ளதால் வெகு விரைவில் சசிகலா முதல்வராக போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
அதன் ஒரு கட்டமாக சசிகலா ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தலைமை தாங்க இருக்கிறார்.
மேலும், உளவு துறை ரிப்போர்ட்டின் படி சசிகலா முதல்வரானதும் ரூபாய் நோட்டுகள் தடை நடவடிக்கையின் போது, சில அமைச்சர்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் தில்லுமுல்லு செய்துள்ளதால் அவர்கள் பதவியை பறிப்பார் என கூறப்படுகிறது.
சசிகலா புது பரபரப்பை அரசியலிலும், ஆட்சியிலும் ஏற்படுத்துவது உறுதி என அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது