தமிழக அரசியலை பார்த்து தற்போது பலர் வியந்து போயுள்ளார்கள். காரணம், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே துளிர்த்துள்ள அரசியல் நாகரீகம்.
கடந்த 30 ஆண்டுகளாக அதிமுக, திமுக இடையே இருந்த தனி மனித தாக்குதல்கள் குறைந்து வருவது கண்கூடாக தெரிகிறது.
முக்கியமாக, நடந்து வரும் சட்டச்சபை கூட்ட தொடரில், எதிர்க்கட்சி தலைவர் செயல்பாட்டை பேரவை தலைவர் பாராட்டுவதும், முதல்வரை எதிர்க்கட்சி தலைவர் பாரட்டுவதும் என நாகரீகமாக சபை நடைபெற்று வருகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக முதல்வருக்கு மன்னார்குடி கோஷ்டியால் ஏற்ப்பட்டுவரும் குடைச்சலை அறிந்து தான் ஸ்டாலின் ஓ.பி.எஸ்க்கு நெருக்கடி தராமல் ஆதரவு தந்து வருகிறார்.
மேலும், சசிகலாவை விட பன்னீர்செல்வம் எவ்வளவோ மேல் என்ற அடிப்படையிலும் முக்கியமாக அவருக்கு தி.மு.க ஆதரவு கொடுத்து வருகிறது.
ஓ.பி.எஸூம் தனக்கு சிக்கல் வரக்கூடாது என திமுகவிடம் நெருக்கம் காட்டி வருகிறார்.
இதையெல்லாம் பற்றி ஸ்டாலின் தன் சகாக்களிடம், வெறுப்பு அரசியல் என் தந்தை கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுடனே போகட்டும். நாம் அப்படி இருக்க வேண்டாம்.
சசிகலா எதிர்ப்பாளர்கள் தீபாவுக்கு பின்னால் செல்கிறார்கள். நாளை சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் நம் பின்னால் வர கூட வாய்ப்பிருக்கிறது எனவும் கூறினாராம்.