மத்திய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயரும். அதேசமயம், சோலார் மின்தகடுகள், எரிபொருள் கலன்கொண்ட மின் உற்பத்தி அமைப்புகள், காற்றின்மூலம் இயக்கப்படும் ஜெனரேட்டர் ஆகியவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால் கிளீன் எனர்ஜி எனப்படும் தூய சக்தி ஆதாரங்களின் விலை குறையும்.
விலை உயரும் பொருட்கள்:
சிகரெட்டுகள், பான் மசாலா, சிகார், சுருட்டுகள், பீடிகள், மெல்லும் புகையிலை, எல்.இ.டி. விளக்கு உதிரிபாகங்கள், முந்திரி (வறுத்த மற்றும் உப்புபோடப்பட்ட), கண்ணாடி இழைகள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பாலிமர் பூசிய எம்.எஸ். டேப்கள்,
அலுமினியம் தாதுக்கள், வெள்ளி நாணயங்கள்-பதக்கங்கள், செல்போன்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள்.
விலை குறையும் பொருட்கள்:
திரவ இயற்கை எரிவாயு, வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீர் சுத்திகரிப்பான் வடிகட்டி (RO membrane elements), சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள், எரிபொருள் செல் சார்ந்த மின் உற்பத்தி அமைப்புகள், காற்று மூலம் இயக்கப்படும் ஜெனரேட்டர், பிஓஎஸ் இயந்திரங்கள் மற்றும் கைரேகை பதிவு எந்திரம் (fingerprint readers), ராணுவத்தினருக்கான குழு காப்பீடு.