ரணில் தமிழ் மக்களுக்கு சார்பான இனவாதியாம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமிழருக்கு சார்பான இனவாதி என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அவருக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் எந்த வித வித்தியாசமும் இல்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒரு உக்கிரமான தமிழ் இனவாதியாவார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை.

வட மாகாணத்தில் எந்த அரச திணைக்களங்கமும் இல்லை. மத்திய அரசாங்கத்தின் தலையீடும் அங்கு செல்லுப்படியாகாது. அங்கு தனியானதொரு ராஜ்ஜியம் முன்னெடுக்கப்படுகின்றது. இதுதான் நீங்கள் கூறிய நல்லாட்சியா” என அவர் தெரிவித்துள்ளார்