மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு! மக்கள் பதற்றம்

யாழ்.கஸ்தூரியார் வீதியில் வீடொன் றின் முன் நின்றிருந்த இளைஞர்கள் மீது 2மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று வாளினால் வெட்ட முயன்ற போது குறித்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள வீடுஒன்றுக்குள் தஞ்சம் புகுந்து தப்பியுள்ளனர்.

நேற்று மாலை 6.40 மணியளவில் கஸ்தூரியார் வீதியில் உள்ள வீடொன்றுக்குமுன் 4 இளைஞர்கள் நின்றுள்ளனர்.

அப்போது அப்பகுதியால் 2 பல்சர் மோட்டார்சைக்கிளில் வாள்களுடன் வந்த குழு ஒன்று குறித்த இளைஞர்கள் மீது வாளினால் வெட்டமுயன்றுள்ளது.

இந்நிலையில் குறித்த இளைஞர்கள் அருகில் உள்ள வீடொன்றுக்குள் தஞ்சம்புகுந்துள்ளனர்.

அச்சமயத்தில் அந்த வாள்வெட்டுக் குழுவினர் வீ தியில் நின்றிருந்த மேற்படி இளைஞர்களின்மோட்டார் சைக்கிள் மீது கோடரியால் வெட்டியுள்ளனர்.

இந்நிலையில், மக்கள்கூடியதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாள்வெட்டு குழு தப்பிச் சென்றுள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்குயாழ்.பொலிஸ் நிலைய பொலிஸார் வந்து இளைஞர்களைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இதேவேளை யாழ். நகருக்குள் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.