நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் அபிவிருத்திப் பணிகளை சம அளவில் முன்னெடுப்பது குறித்தே அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் குடாகம்மான பகுதியில் இன்று காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே நிதி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின்கீழ், ஒரு குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.
வீதிகள் மட்டுல்ல பாடசாலைகள் சுகாதாரத் துறை என்பனவும் அபிவிருத்தி செய்யப்படும்.
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.