ஆபாச படங்கள் இருப்பதால் பீட்டா இணையதளத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்ற போது பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க கோரி ஒட்டு மொத்தமாக கோஷம் எழுப்பட்டது. பீட்டா அமைப்பிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனிடையே பீட்டா இணையதளத்தில் ஆபாசப் படங்கள் இடம் பெற்றுள்ளது எனக் கூறி, அந்த அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை அயனாவரத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்தை நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும் பீட்டா பற்றி இணையதளத்தில் தேடினால் ஆபாச படங்களே கிடைக்கின்றன. படங்களை குழந்தைகள் பார்க்கும்போது மனதளவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.