நீதிபதி முன் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணால் பரபரப்பு! எதற்காக?

மகாராஷ்டிராவில் இளம்பெண் ஒருவர் நீதிபதிகள் முன்பே தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சாங்கிலி மாவட்டம் மங்கருள் பகுதியை சேர்ந்தவர் சுவாதி (25).

இவர் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில் அவரது கணவர் திருமணம் ஆன சில நாட்களில் வெளிநாடு சென்றுவிட்டார்.

அதன் பிறகு கணவர் வீட்டார் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறிய சுவாதி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் சுவாதி கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு சாங்கிலி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்படவிருந்த நிலையில், முன்னதாக நீதிபதிகள் வேறு வழக்கினை விசாரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்குச் சென்ற சுவாதி, நிதீபதிகளை பார்த்து ’உங்கள் மீதும், நீதி மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை’ என கூறி ஆர்ப்பாட்டம் செய்தார்.

பின்னர் தான் கைப்பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.

இதை கண்காணித்துக் கொண்டிருந்த பெண் காவலர் ஒருவர் சுவாதியின் கையில் இருந்த கத்தியை உடனே பிடிங்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் சுவாதி மீது தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டனர். இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது..