வெறியாட்டம் ஆடிய அமெரிக்க படை…கதறிய ஏமன் நாடு: டிரம்ப் கொடுத்த முதல் உத்தரவு!

ஏமனில் அமெரிக்க பாதுகாப்பு படைகள் நடத்திய கொடூர தாக்குதலில் 57 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள டிரம்ப் தனது அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறார். அதில் அமெரிக்க பாதுகாப்பு படைக்கு தன்னுடைய முதல் உத்தரவை கொடுத்துள்ளார்.

இதனால் அமெரிக்க பாதுகாப்பு படைகள் ஏமனில் உள்ள அல்கொய்த அமைப்பின் தலைவரான Abdulrauf al Dhahab வீடு இருந்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது இப்பகுதியில் உள்ள பள்ளிகள், மசூதிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

முதலில் அமெரிக்க பாதுகாப்பு படைகள் ஹெலிகாப்டர் மூலம் Abdulrauf al Dhahab வீடு இருந்த பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் பின்னர் படை வீரர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகள் மூலம் தாக்குதலை தொடர்ந்துள்ளனர்.

 இதில் 57 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 16 பொதுமக்கள் மற்றும் 14 தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 8 வயது குழந்தை ஒருவரும் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இத்தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் இறந்துள்ளதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏமனில் அமெரிக்க பாதுகாப்பு படைகள் தாக்குதல் நடத்தினர். அதன் பின்னர் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் டிரம்ப் 30 நாட்களில் தீவிரவாதிகளை ஒழித்துக்காட்டுவேன் என்று கூறியிருந்தார்.

தற்போது அதற்கான வேலைகளை இறங்கியுள்ளதில், இதில் 14 தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளது. டிரம்பிற்கு கிடைத்த முதல் வெற்றி என்றே கூறப்படுகிறது.